நாட்டு மக்களை காப்பாற்றாமல் நாட்டின் பெயரை காப்பாற்றுவது அரசின் கடமையா?  காங்கிரஸ் கட்சி மாநில பேச்சாளர் வேலுச்சாமி கேள்வி ?

நாட்டு மக்களை காப்பாற்றாமல் நாட்டின் பெயரை காப்பாற்றுவது அரசின் கடமையா?  காங்கிரஸ் கட்சி மாநில பேச்சாளர் வேலுச்சாமி கேள்வி ?

பிரதமர் என்பவர் மக்களின் பிரதிநிதியாக இருக்க வேண்டும். ஆனால் இவர் அந்நிய நாட்டின் பிரதமராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். உத்திரபிரதேசத்தில் நடந்த கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர் அதையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை மத்திய அரசு.
மாநில அரசு மக்களுக்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பித்தது கண் துடைப்பு நிகழ்ச்சிகளை காட்சிப்படுத்தி கொண்டிருக்கின்றன. நாட்டு மக்களை காப்பாற்றுவது விட்டு விட்டு நம்முடைய நாட்டின் பெயரை காப்பாற்றி எவ்வித பயனுமில்லை.

கொரோனா  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது மக்களுக்கு தெரியும்  கடந்த ஆண்டே இரண்டாம் அலை அதிக வீரியத்துடன் இருக்கும் என்று அரசுக்கு தெரிந்தும் தடுப்பூசிகளை மக்களுக்கு பயன்படுத்தாமல் அந்நிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பது மக்களுக்கு எதிராக செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். இன்னும் பல மாவட்ட மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி மருந்துகள் சென்று சேரவே இல்லை. ஆனால் இந்த மத்திய அரசும், மாநில அரசும் அவர் அவர்களுக்கு சாதகமான எல்லா செயல்களையும் செய்துவிட்டு மக்கள் விழிப்புணர்வோடு இல்லை என்று மக்களை குறை கூறிக் கொண்டிருக்கின்றனர்.

சென்ற ஆண்டு தப்லீக் ஜமாத் கூட்டத்திற்கு சென்று  தான் கொரானா அதிகரித்தது என்று வீடு வீடாக சென்று அவர்களை சோதனைக்கு உட்படுத்தினர். ஆனால் இன்றைக்கு லட்சக்கணக்கானவர்கள் கும்பமேளாவில் கலந்து கொண்டனர் இதையெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என 
அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது.

மாநில அரசு மத்திய அரசின் எடுப்பார் கைப்பிள்ளையாகவே மாறியுள்ளது.
 மக்களுக்காக உழைத்த மாபெரும் தலைவர் அண்ணாவின் படத்தை வெறும் கட்சி கொடிகளிலும்   அவர் பெயரை கட்சியில் காட்சிப் பொருளாக வைத்து விட்டு அவருடைய கொள்கைகளையும் ,மக்களுக்காக அவர் ஆற்றிய தொண்டுகளையும்  மறந்தே இப்போது இருக்கும் அனைத்து இந்திய  அண்ணா திராவிட முற்போக்கு கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரசு அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு கொண்டு மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது  என்பது தான் நிதர்சனமான உண்மை என்று மத்திய அரசையும், மாநில அரசையும் குற்றம்சாட்டியுள்ளார் காங்கிரஸ் கமிட்டி மாநில பேச்சாளர் வேலுச்சாமி.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu