ஊரடங்கு அரசு பேருந்து இயக்க நேரம் மாற்றம்

ஊரடங்கு அரசு பேருந்து இயக்க நேரம் மாற்றம்

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் அதனை 
கட்டுபடுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன்படி இன்று முதல் 20.04.2021 முதல் 
30.04.21-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கவும், இதனால் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை பேருந்துகள் இயக்கம் செய்யக்கூடாது என அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (கும்ப)லிட் திருச்சி மண்டலம் மூலம் அரசு அறிவித்துள்ள ஊரடங்கினை பின்பற்றிட கீழ்கண்டுள்ளவாறு பேருந்துகள் இயக்கத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. 

திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து 
நிலையங்களிலிருந்து இயக்கப்படும் நகரப்பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும். மேலும் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் இதர பேருந்து 
நிலையங்களிலிருந்து இரவு 9.30 மணிக்கு நடை எடுத்து அந்தந்த ஊர்களுக்கு 
இரவு தங்கல் செய்யப்படும். பேருந்துகள் மார்க்கம் போல் அனைத்து வழித்தடங்களிலும் பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இயக்கப்படும்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் தொலைதூர வழித்தட புறநகர் பேருந்துகள் குறிப்பிட்டுள்ள நேரங்களில் காலை/மாலை கடைசி பேருந்துகளாக இயக்கப்படும். எனவே திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து குறிப்பிட்டுள்ள நேரங்கள் வரை இரவு நேரத்தில் கடைசி பேருந்துகள் இயக்கப்படும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu