பயன்படுத்திய சமையல் எண்ணெய் மூலம் பயோடீசல் உற்பத்தி

பயன்படுத்திய சமையல் எண்ணெய் மூலம் பயோடீசல் உற்பத்தி

கே.பி எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாநகரில் உள்ள 40 ஹோட்டல்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை லிட்டர் ரூபாய் 25க்கு வாங்குகின்றனர். பின்னர் இந்திய பயோடீசல் அசோசியேஷன் அங்கீகரித்த சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள பயோடீசல் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கொண்டு செல்கின்றன. பின்னர் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மறுசுழற்சி செய்யப்பட்டு டீசலாக மாற்றப்படுகிறது. இவை ஜெனரேட்டர்கள் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும்.

விலை குறைவானதாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிக்காத வகையில் அதிக அளவு கரும்புகை வெளியாகுவதை குறைக்கும் வகையில் பயோடீசல் பயன்பாடு இருக்கும். திருப்பூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் பயோடீசல் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது என்று கூறுகிறார் கிஷோர்குமார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில்.. நான் பொறியியல் படிக்கும் பொழுதே பயோடீசல் பற்றிய என்னுடைய ப்ராஜெக்ட் மூலம் சிலவற்றை தெரிந்து கொண்டேன். இதை நடைமுறைப்படுத்தலாமே என்று அரசு இத்திட்டத்தை கொண்டு வரும் பொழுது அவர்களோடு இணைந்து  நாங்கள் இதில் செயல்பட தொடங்கினோம்.

பயன்படுத்திய எண்ணெய்யை வீணாக கழிவுகளோடு சேர்ந்துவிடுகின்றன அல்லது சாலையோரத்தில் உணவு கடைகளில் மீண்டும் பயன்படுத்த வாங்கி செல்கின்றனர். இதனால் பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.  இதனை தடுக்கும் விதமாக திருவானைக்கோவிலில் எண்ணெய் சேகரிக்கும் கிடங்கை அமைத்து ஒவ்வொரு ஹோட்டலுக்கும் நேரடியாக சென்று ஒரு லிட்டர் எண்ணெய் ரூபாய் 25 கொடுத்து வாங்கி கொள்கிறோம். மாதந்தோறும் 1000 லிட்டர் வரை சேகரித்து வருகிறோம்.   பயன்படுத்திய எண்ணெய் வீணாகாமல் ஒரு புதிய முயற்சியாக பயோ டீசல் மூலம் இயற்கைக்கும் மீண்டும் மறுசுழற்சி மூலம் பயன்படுத்தும் விதமாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பது செயல்பாட்டிற்கான மிக முக்கிய காரணம்.

இதனைைதொடர்ந்து புதுக்கோட்டை மற்றும் பெரம்பலூரில் எங்களின் கிளைகள் தொடங்கப்பட உள்ளோம். விரைவில் மத்திய அரசு அனுமதி பெற்று திருச்சியில் பயோடீசல் விற்பனையகம் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu