VDart குழுமம் சார்பில் சாலை விபத்துகளை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

VDart  குழுமம் சார்பில் சாலை விபத்துகளை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

 நெடுஞ்சாலைகளில் இரவுநேரங்களில் வாகனங்கள் செல்லும்போது, பழுது அல்லது ஓய்வுக்காக சாலையோரம் ஏதேனும் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தால், அவை நிற்பது தெரியாமல் பின்னால் வரும்வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுவது அடிக்கடி நடக்கிறது.

இதைத் தவிர்க்க வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சம் பட்டு, ஒளியை பிரதிபலிக்கும் ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும் என்ற மோட்டார் வாகன விதிமுறை ஏற்படுத்தப்பட்டது.

 விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில்வாகனங்களில் ஒளி பிரதிபலிப்பான் ஸ்டிக்கரை ஒட்டுவது குறித்து திருச்சி vdart குழுமத்தை சேர்ந்த ஊழியர்கள் விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.

மன்னார்புரம் சிக்னல் மற்றும் கரூர் பைபாஸ் சிக்னல் வழியே சென்ற வாகனங்களில் சுமார் 200 பணியாளர்கள் கலந்துகொண்டு 2000 ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  சாலையில் வாகனத்தை ஓட்டும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

 மன்னார்புரம் சிக்னலில் தெற்கு போக்குவரத்து காவல் உதவி ஆணையர் முருகேசன், கரூர் பைபாஸ் சாலை சிக்னலில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ஜோசப் ஆகியோர் முன்னிலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO