திருச்சியில் 127 ஆண்டுகளுக்குப் பின் உச்சம்தொட்ட வெயில்!

திருச்சியில் 127 ஆண்டுகளுக்குப் பின் உச்சம்தொட்ட வெயில்!

தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. திருச்சியிலும் இந்த ஆண்டு வழக்கத்தைவிட 3 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக 43.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 1896 ஆம் ஆண்டுக்குப் பின்னர் திருச்சியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும்.

 1896 ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி 43.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது. 127 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று பதிவான 43.1 டிகிரி செல்ஷியஸ் என்பதே திருச்சியின் காலநிலை வரலாற்றில் பதிவான இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாகும். இதற்கு முன்னர் 1888 ஆம் ஆண்டில் மட்டும் இதே அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.

முன்னதாக, 2013 ஆம் ஆண்டு மே, 18 ஆம் தேதி 42.9 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளிலும் 42 டிகிரி செல்ஷியஸுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. காலநிலை மாற்றம் காரணமாக உலக வெப்பமயமாதல் அதிகரித்து வரும் நிலையில், போதிய முன்னெசரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என எச்சரிக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.....https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision