கொரோனா கால உதவித்தொகை பெறாத மாற்றுத்திறனாளிகள் சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம் நீதிபதி அறிவிப்பு

கொரோனா கால உதவித்தொகை பெறாத மாற்றுத்திறனாளிகள் சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம் நீதிபதி அறிவிப்பு

கொரோனா பரவல் காலத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்ட ரூ .1000 சிறப்பு உதவித்தொகை கிடைக்கபெறாத மாற்றுத்திறனாளிகள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார் .

  கொரோனா பரவல் பொதுமுடக்கம் காரணமாக பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் படியும் , தமிழக அரசாணையின் படியும் சிறப்பு உதவித்தொகையாக ரூ .1000 / - அரசால் வழங்கப்படுகிறது . இதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளில் , இதுவரை 29,642 நபர்கள் மட்டுமே இந்த உதவித்தொகை பெற்றுள்ளார்கள் . மேற்படி சிறப்பு உதவித்தொகையை இதுவரை பெறாதவர்கள் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்புகொள்ளுமாறும் , அவ்வாறு தொடர்பு கொள்ள முடியாதவர்கள் , மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள் , மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வாங்க இயலாதவர்களும் திருச்சிராப்பள்ளி , மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம் .

அதேபோல தாலுக்கா அளவில் மணப்பாறை , லால்குடி , துறையூர் , முசிறி உள்ளிட்ட தாலுக்கா கோர்ட்டில் இயங்கும் வட்ட சட்டப்பணிகள் குழுவையும் தொடர்பு கொள்ளலாம் .

நேரில்வர இயலாதவர்கள் 0431-2460125 என்ற தொலைப்பேசி லமும் , dlsatiruchirappalli@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பியும் தீர்வுப்பெறலாம் . இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் , முதன்மை மாவட்ட நீதிபதி K. முரளிசங்கர்  தெரிவித்துள்ளார் .