திருச்சி மணிகண்டம் ஒன்றியத்தில் 100 சதவீத எழுத்தறிவு இயக்கத்தின் வெற்றி விழா
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை கல்வி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் 100 சதவீதம் எழுத்தறிவு இயக்கம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதற்கான வெற்றிவிழா புங்கனூரில் நடைபெற்றது. பள்ளி கல்வித்துறை மற்றும் தன்னார்வலர் அமைப்புகளும் இணைந்து விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஆஷாதேவி மற்றும் மாநில விருது பெற்ற ஜெயராணி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி சமூகப்பணி துறை தலைவர் மற்றும் முதல்வரிடம் அமைச்சர் 100 சதவீதம் எழுத்தறிவு திட்ட பணிகளை ஆய்வு செய்து உறுதி சான்றிதழ் வழங்கிட புதிய பட்டியலை வழங்கினார். எழுத்தறிவு இயக்கத்தின் மூலம் வாசிப்பு மற்றும் எழுதுவதற்கு பயிற்சி பெற்ற முதியவர்கள் புத்தகத்தை வாசித்துக் காட்டியதோடு சிலேட்டில் எழுதியும் காட்டினர்.
கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை முதியவர்கள் உலகிற்கு பறைசாற்றி உள்ளனர். இதனை தொடர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் முதியவர்களுக்கு மட்டுமின்றி அனைவரும் கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்துவதோடு கல்வியின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்கு மணிகண்டம் ஒன்றியம் ஒரு முதன்மை எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn