திருச்சி அரசு மருத்துவமனையில் சர்வதேச குழந்தைகள் நல தினம் கொண்டாட்டம்

திருச்சி அரசு மருத்துவமனையில் சர்வதேச குழந்தைகள் நல தினம் கொண்டாட்டம்

திருச்சி அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு சார்பாக சர்வதேச குழந்தைகள் நல தினம் கொண்டாடப்பட்டது. தேசிய சுகாதார முகமை சார்பாக தமிழ்நாடு முழுவதும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த தினம் கொண்டாடப்பட்டது.

மருத்துவமனை டீன் வனிதா மற்றும் கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையில் குழந்தைகளுக்கான வளர்ச்சி சத்துணவு சம்மந்தமான நோட்டீஸ் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.

செவிலியர்களுக்கான குழந்தைகள் நலம் சம்மந்தமான ஓவிய போட்டியில் பரிசு வென்ற செவிலிய மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். மேலும் மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றில் உள்ள வசதிகளை பற்றி மருத்துவர்கள் உரையாற்றினர்.

பொதுமக்கள் இந்த வசதிகளை பயன்படுத்தி நலம் பெற்று வாழ அறிவுறுத்தினர். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த மருத்துவர் வைரமுத்து, செந்தில்குமார், மைதிலி, நசீர் ஆகியோர் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn