"பீட் ரோந்து காவல் ஆளிநர்களுக்கான காவல் பணி குறித்த கூட்டம்"

"பீட் ரோந்து காவல் ஆளிநர்களுக்கான காவல் பணி குறித்த கூட்டம்"

திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களின் நலனை பேணிகாக்கவும், ரோந்து பணி செய்யவும், பொதுமக்களின் அவசர அழைப்பிற்கு உடனே சென்று சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், வாகன தணிக்கை செய்யவும், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

அதன்படி திருச்சி மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் உள்ள 50 பீட் ரோந்து அலுவலுக்கு மூன்று ஷிப்டுகளில் சுழற்சி முறையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் மற்றும் குற்றச்சம்பவங்கள் தடுக்கவும் 200 காவல் ஆளிநர்களை பணிநியமித்து இத்திட்டம் இன்று (18.12.2022)-ம் தேதி கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், கலந்துகொண்டு பீட் ரோந்து வாகன அணிவகுப்பை கொடியசைத்து துவங்கி வைத்தார்கள்.

இதில் திருச்சி மாநகர காவல் ஆணையர் பீட் ரோந்து காவலர்களிடம் பேசுகையில், "ரோந்து காவலர்கள் தங்களது பீட் ரோந்து பகுதியில் வசிக்கும் பொதுமக்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டு, பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் ஒரு பாலமாக செயல்பட வேண்டும் என்றும், அப்பகுதியில் உள்ள சிறுசிறு பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் உடனே கண்டறிந்து அதனை உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளவும், குற்றம் நடைபெறமால் தடுக்கவும், பொதுமக்களின் பிரச்சனைகளை தீர்க்க துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றும் அறிவுரைகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த சுழற்சி முறையில் பணியாற்றும் பீட் ரோந்து காவல் ஆளிநர்களின் சிறப்பான செயல்பபாடுகளின் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanOll