திருச்சி ஐஓபி வங்கியை பூட்டு போடும் போராட்டம் - கதவு மூடல் பரபரப்பு

திருச்சி  ஐஓபி வங்கியை பூட்டு போடும் போராட்டம் -  கதவு மூடல் பரபரப்பு

ரூ.10 லட்சம் கோடி கடன் வாங்கிய கம்பெனிகளின் கடன்களை தள்ளுபடி செய்து விட்டு ரூ.10 ஆயிரம் கடன் வாங்கிய விவசாயிகளின் கடன்களை பிரதமர் மோடி பென்ஷன் பணம் மாதம் ரூ.500, ஊனமுற்றோர் உதவி தொகை, விதவை உதவி தொகை,100 நாள் பணம், வயது முதிர்ந்தோர் உதவி தொகை வங்கி விவசாய கடனுக்கு பிடிக்ககூடாது என்று மத்திய நிதித்துறை கூறிய பிறகும்,

பிடித்தம் செய்யும் வங்கி மேனேஜரை கைது செய் அல்லது வங்கியை பூட்டு போட்டு பூட்டும் போராட்டம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கண்டோன்மென்ட் IOB ரீஜினல் வங்கி அலுவலகம் முன்பு நடைபெறுகிறது.

விவசாயிகள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் வங்கியின் பிரதான நுழைவு வாயில் மூடப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn