பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350-வது சதய விழா- பாதுகாப்பு அறிவிப்புகள்

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350-வது சதய விழா- பாதுகாப்பு அறிவிப்புகள்

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350-வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அறிவுரைகள்.திருச்சி மாநகரத்தில் வருகின்ற 23-ம் தேதி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350-வது சதயவிழா அரசு விழாவாக நடைபெற உள்ளதை

 முன்னிட்டு, திருச்சி மாநகர ஒத்தக்கடை சந்திப்பில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அமைச்சர்கள் , அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மாலையணிவித்து மரியாதை செய்ய உள்ளனர்.

இவ்விழாவில் திருச்சி மாநகர், திருச்சி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து முத்திரையர் சமுதாயத்தை சார்ந்த மக்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளதால், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின்படி, இவ்விழாவிற்கு காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டடுள்ளன.

இவ்விழாவில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமலும், பொதுமக்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாமல் இருக்க திருச்சி மாநகர் முழுவதும் சுமார் 1200 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவ்விழாவின்போது எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் கண்காணித்துக்கொள்ள வேண்டுமென மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

திருச்சி மாநகரில் செயல்பாட்டில் உள்ள 14 ரோந்து வாகனங்கள், 9 இருசக்கர ரோந்து வாகனங்கள், 3 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் விழிப்புடன் ரோந்து பணி மேற்க்கொள்ள வேண்டுமெனவும், 9 சோதனை சாவடிகளில் சுழற்சி முறையில் போதுமான காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.

திருச்சி மாநகர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள் அனுமதிக்கபட்ட வழித்தடங்களில் மட்டுமே வரவேண்டும்.இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் நபர்கள் சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.இருசக்கர வாகனங்களில் வரும் நபர்கள் தலைகவசம் அணிந்து வர வேண்டும்.

இருசக்கர வாகனத்தில் வருவோர் பொதுபோக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் போக்குவரத்து விதிகளை மீறிய சாலைகளில் எவ்வித சாகசங்களும் செய்யக்கூடாது.மது அருந்திவிட்டு இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எவ்வித இடையூறுமின்றி நடந்து கொள்ள வேண்டும்.நிகழ்வுகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவேற்றம் செய்ய கூடாது. மீறினால் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நீளமான பெரியகம்புகளில் (அ) இரும்பு கம்பிகளில் பெரிய கொடிகளை அசைத்துக்கொண்டு வர கூடாது.நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்கள் வாகனத்தின் மீது ஏறியும், வாகனங்களில் பக்கவாட்டில் தொங்கியபடியும் வரக்கூடாது.சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி வரக்கூடாது.

ஒத்தக்டை சந்திப்பில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு 100 மீட்டர் (அ) 50 மீட்டர் முன்பு காவல்துறையினர் அறிவுறுத்தும் இடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, நடந்து சென்று மாலை அணிவித்து செல்லவேண்டும்.திருச்சி கோட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ஒப்புக்கொண்டதன்படி, அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் மாலை அணிவிக்க வர வேண்டும்.மேலும் இவ்விழாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் நடந்து கொள்பவர்கள் மற்றும் சாலை போக்குவரத்து விதிகளை மீறிவோர்ககள் மீது தகுந்த சட்டபடியான நடவடிக்கை மேற்க்கொள்ளபடும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision