திருச்சியில் நேற்று (10.05.2024) பெய்த மழையின் அளவு

திருச்சியில் நேற்று (10.05.2024) பெய்த மழையின் அளவு

கோடை வெயில் திருச்சி மக்களை சில வாரங்களாக வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இதனால் திருச்சி மக்கள் சற்று மன நிம்மதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று (10.05.2024) திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையின் அளவுகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்திற்குட்பட்ட தேவிமங்கலம் 47.2 மி.மீ, சமயபுரம் 65.2 மி.மீ, சிறுகுடி 2.2 மி மீ, வாதலை அணைக்கட்டு 13 மி.மீ

மணப்பாறை வட்டத்திற்குட்பட்ட மணப்பாறை 12 மி.மீ, பொன்னியார் டேம் 14 மி.மீ, 

முசிறி வட்டத்திற்கு உட்பட்ட முசிறி 56 மி.மீ, புலிவலம் 15 மி.மீ, தாத்தையங்கார் பேட்டை 2 மி.மீ,

ஸ்ரீரங்கம் வட்டத்திற்குட்பட்ட நவலூர் கொட்டப்பட்டு 2.5 மி.மீ,

திருவரம்பூர் வட்டத்துக்கு உட்பட்ட துவாக்குடி ஐ எம் டி ஐ 8 மி.மீ,

துறையூர் கொப்பம்பட்டி 5 மி.மீ, தென்பெர நாடு 21மி.மீ, துறையூர் 19 மி.மீ, ஆகிய அளவுகளில் மழை பெய்துள்ளது.

இந்த பகுதிகளில் பெய்த மழையின் மொத்தம் அளவு 252.1 மில்லி மீட்டர். மழையின் மொத்த சதவீதம் 11.75 ஆகும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision