திருச்சி பஞ்சப்பூர் பகுதி நிலங்களை தொடர்ந்து அபகரித்த ரவுடியை 'அகழி' ஆப்ரேஷினில் கைது.மற்றொருவர் தலைமறைவு

Trichy Panjapur seize lands

திருச்சி பஞ்சப்பூர் பகுதி நிலங்களை தொடர்ந்து அபகரித்த ரவுடியை 'அகழி' ஆப்ரேஷினில்  கைது.மற்றொருவர் தலைமறைவு

திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வருவதால் அப்பகுதியில் உள்ள நிலங்களின் மதிப்பு விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனை பயன்படுத்தி அங்கு உள்ள நில உரிமையாளர்களிடம் கொட்டப்பட்டு செந்தில், சாத்தனூர் அண்ணாமலை இருவரும் நிலங்களை அபகரித்து மிரட்டி பொய் பத்திரங்களை தயார் செய்வதும், வழக்கு தொடர்ந்து கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு அதிக அளவு பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு தகவல் வந்ததன் அடிப்படையில் கொட்டப்பட்டு செந்தில் மற்றும் அண்ணாமலை இருவர் மீதும் மிரட்டல் மற்றும் போலியாக நில பத்திரங்களை தயாரிப்பது கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பணம் பறிப்பது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மணிகண்டம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
(191(2),191(3),296(b),351(3) 
r/w 4 of WH Act & 25(1-B)(a) Arms Act)

 கொட்டப்பட்டு செந்திலை பிடிக்க காவல்துறையினர் முற்பட்ட பொழுது தப்பியோடி  விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார்.கொட்டப்பட்டு செந்தில் மீது பல்வேறு மிரட்டல் வழக்குகள் உள்ளது.சரித்திர பதிவேடு குற்றவாளி. அண்ணாமலை மீதும் மிரட்டுதல், ஏமாற்றுதல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை  பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்கிறது.

 மேலும் நில உரிமையாளர்கள் தங்களுடைய நிலங்களை யாரும் அபகரித்தால் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் அவர்களின் உதவி கைபேசி எண்ணுக்கு +91 94874 64651 தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  Operation அகழி என்ற பெயரில் மத்திய மண்டலத்தில் காவல்துறையினர் ரௌடிகளை அடக்க ஒரு special drive-ல் ஈடுபட்டுள்ளனர்.  அகழி கோட்டையை காப்பது போல் இந்த தேடுதல் வேட்டை நில முதலாளிகளை காப்பாற்றும் அதிரடி செயல். நில உரிமையாளர்களை யார் மிரட்டினாலும் குண்டாஸில் கைது செய்யப்படுவர் என தகவல் வெளியாகி உள்ளது தொடர்ந்து திருச்சி கரூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் அகழி அதிரடி தேர்தல் வேட்டை தொடரும் நில உரிமையாளர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை அந்தந்த மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர்களிடம் தைரியமாக
 புகார் கொடுத்து தங்களது நிலங்களை  உரிமையுடன் பாதுகாத்துக் கொள்ளலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை

வாட்ஸ் அப் மூலம்

அறிய... https://chat.whatsapp.com/IpuT

LRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும்

அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision