திருச்சியை சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வங்கதேச இராணுவத்தால் கைது

திருச்சியை சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வங்கதேச இராணுவத்தால் கைது

திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்தவர் ஜான் செல்வராஜ் (47) இவர் காவல்துறையில் 1993 பேட்ச்யை சேர்ந்தவர். இவருக்கு மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர். இவர் திருச்சி ஸ்ரீரங்கம் போக்குவரத்து காவல் நிலையத்திலும், போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிலும் பணியாற்றியவர். இந்த நிலையில் ஜான் செல்வராஜ் திருச்சியில் பணியில் இருந்த போது அடிக்கடி பணிக்கு செல்லாமல் ஒழிங்கினமாக இருந்துள்ளார். இதனால் காவல்துறை உயர் அதிகாரிகள் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

அதன் பிறகு தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு முறையான கடிதம் உயர் அதிகாரிகளுக்கு கொடுத்ததன் பேரில், இவருடைய பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் ஜான் செல்வராஜ், சென்னை மாநகர காவல் துறைக்கு மாற்றப்பட்டு சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பணியில் இருந்தார். பின்னர் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டு சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அப்போது ஜான் செல்வராஜ்க்கு சேலையூர் காவல் நிலையத்தில் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு அழைத்துச் செல்லும் பணி வழங்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜான் செல்வராஜ் மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊரான திருச்சிக்கு செல்வதாக கூறியுள்ளார். ஆனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜான் செல்வராஜ் மேற்குவங்க மாநிலம் இந்திய எல்லை வழியாக வங்கதேச எல்லைக்குள் சட்ட விரோதமாக ஊடுருவியதாக கூறப்படுகிறது. அங்க பாதுகாப்பு பணியில் இருந்த வங்க தேச ராணுவத்தினர் ஜான் செல்வராஜை சுற்றி வளைத்து பிடித்து வங்கதேச ராணுவ முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு தகவல் தெரிவித்துள்ளது.

சம்பவம் தமிழ்நாடு காவல்துறை இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜான் செல்வராஜ் எதற்காக சட்டவிரோதமாக இந்திய எல்லை தாண்டி வங்கதேச எல்லைக்குள் ஊடுருவினார். அவர் தாம்பரம் மாநகர காவல் ஆணையரக பணியில் இருந்த போது குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பணியில் இருந்துள்ளார். அப்போது வங்கதேசத்தை சேர்ந்த குற்றவாளிகள் யாருடனாவது தொடர்பு உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision