வதந்தி செய்திகளை பரப்புபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் - எஸ்.பி அதிரடி பேட்டி
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்..... வதந்திகளை பரப்புவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பொய் செய்தி பரப்பினால் வழக்கு பதிவு நிச்சயம் செய்யப்படும். திருச்சி மாவட்டத்தில் பொய் செய்திகளை பரப்பிய 2 பேர் வழக்கு மீது பதிவு. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கூட நடவடிக்கை எடுக்க முடியும். உண்மை விட பொய் வேகமாக பரப்பபடுகிறது. எந்த முகாந்திரம் இல்லாமல் குழந்தை கடத்தல் தொடர்பாக பொய் செய்தி பரபரப்படுகிறது. வதந்திகள் பரப்பபடுவார்களால் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டு விடகூடாது . பொதுமக்கள் யாரும் சுயமாக எந்தவிதமான முடிவும் எடுக்கக்கூடாது. காவல்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..... கடந்த சில நாட்களாக, தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தப்படுவது சம்மந்தமாக வதந்திகள் விஷமிகளால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. மேலும், இதனை சில ஊடகங்களும் செய்தியாக வெளியிடுகின்றனர். இத்தகைய குழந்தை கடத்துவது சம்மந்தமான செய்திகளால், பொதுமக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்குவதுடன், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உண்டாக்குகிறது. மேலும், வடமாநிலத்தவர்கள் பிழைப்புக்காக, பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் சமயங்களில், இவர்கள் தெருக்களில் செல்லும் போது, பொது மக்கள் வடமாநிலத்தவர் என்பதால். இவர்கள் குழந்தைகளை கடத்த வந்திருப்பார்கள் எனக்கருதி, அவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். மேற்படி, வடமாநிலத்தவர்கள், மொழி பிரச்சனை காரணமாக, தங்கள் நிலையை கூற இயலாமல் அடி உதைக்கு ஆளாகின்றனர். இவ்வாறான, தவறான செய்திகளை பரப்புவோர் மீது.
கீழ்கண்ட மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1. நாகப்பட்டினம் டவுன் காவல்நிலையம் குற்ற எண் : 60/24 U/s 153, 504,505 (I) (b). 505 (2) IPC &IT Act, 2. ஒட்டன்சத்திரம் காவல்நிலைய குற்ற எண் : 170/24 U/s 504,505 IPC &67 of IT Act. எனவே, திருச்சி மாவட்டத்தில் இது போன்று குழந்தை கடத்தல் சம்மந்தமான வதந்திகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என. திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ. வருண்குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision