திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு

திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு

திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் இன்று மாலை தனது பிரச்சாரத்தை துவங்குவதற்காக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். திருச்சி விமான நிலையம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

முன்னதாக திமுக தலைவரை வரவேற்க திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு,திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் இனிகோ இருதயராஜ், திருவெறும்பூர் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் மனப்பாறை தொகுதியில் போட்டியிடும் அப்துல் சமது உள்ளிட்டோர் வரவேற்க வந்திருந்தனர்.