வங்கிகள் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து திருச்சியில்  வங்கி ஊழியர்கள் போராட்டம் 

வங்கிகள் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து திருச்சியில்  வங்கி ஊழியர்கள் போராட்டம் 

தேசிய வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் ஒரு‌ பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கனரா வங்கி ஊழியர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில், வங்கிகள் தனியார் மயமாக்கும் தை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

இப்போராட்டத்தில் திருச்சி மாவட்ட  வங்கி அதிகாரிகள் சங்க மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமை ஏற்று பேசினார்.
" வங்கிகள் தனியார் மயமாதலால் பாதிக்கப்படுவது ஊழியர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசமும் தான் .இட ஒதுக்கீடு என்பது தனியார் துறையிலும் முறையாக பின்பற்றப்படுவதில்லை. போராடி பெற்ற இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. தனியார் துறையில் காலங்காலமாக சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கோடிக்கணக்கான மக்களின் வளர்ச்சியும் தடைபடுகிறது.

இது சமூக நீதிக்கு எதிரானது. குறைந்த உற்பத்தி செலவு குறைவான ஊழியர் நிறைவான லாபம் என்பது தான் தனியார் துறையின் தாரகமந்திரம். ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் நிறுவனமாக இருந்தாலும் தேசிய மயமாக இருந்தால் அவை முழுவதும் நாட்டு மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவிடப்படும் ஆனால் தனியாரிடம் இருந்து 30% வரி மட்டுமே பெறப்படும் மீதும் அவர்களது லாபம் , 70% அரசுக்கு இழப்பு தான். இது அனைத்து மக்களையும் பாதிக்கும் .விவசாயம் தன்னிறைவு பெற, விவசாய வளர்ச்சி ஏற்பட, விவசாய கடன்களை பெருமளவு வழங்கியும் சிறு குறு தொழில்கள் வளர வழிவகுத்தது பொதுத்துறை வங்கிகளே" என்றார். 

மேலும்," இன்று 140 இலட்சம் கோடி ரூபாய் இந்த வங்கிகளில் மக்களின் சேமிப்பாக இருக்கிறது இதனை தனியார்  கொள்ளையர்கள் சூறையாடி விடக்கூடாது என்பதற்காக நடத்தும் போராட்டம் வங்கி ஊழியர்களுக்கு மட்டும் ஆனதல்ல தேச நலனுக்கான போராட்டம்.

எதிர்கால இந்திய இளைஞர்கள் வேலை உரிமை போராட்டம் . விவசாய வளர்ச்சி ,தொழில் துறை வளர்ச்சி மேன்மையடைய பொதுத்துறையை மேன்மையானது என்பதை மக்களிடம் கொண்டு செல்வதே இந்த போராட்டத்தின் நோக்கம்" என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I