பணத்தை கொடுத்து ஏமாந்த நான்கு பேர் கைது - மோசடி செய்தவர் புகார்
மதுரை சேர்ந்த வினோத் என்பவர் 10 லட்ச ரூபாயை தனது நண்பர்கள் கார்த்திக், ஜெயசீலன், ராகவன் ஆகியோரிடம் இருந்து பெற்று பாலமுருகன் என்பவரிடம் ஆன்லைன் வர்த்தகத்திற்காக கொடுத்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த பாலமுருகன் இவர்களிடம் 10 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. பின்பு வினோத் தனது மனைவியிடம் சொல்லி பாலமுருகனை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேச வைத்து தானும் ஆன்லைன் வர்த்தகம் செய்ய உள்ளதாக குறிப்பிட்ட பொழுது அவர் தான் இப்பொழுது பட்டாசு விற்பனை செய்வதாக கூறியுள்ளார் .
அவரும் எனக்கு பட்டாசு வேண்டுமென தெரிவித்தவுடன் அருப்புக்கோட்டை அருகே அவரை வினோத் மற்றும் அவரது நண்பர்கள் பாலமுருகனை பிடித்தனர். பின்பு அவரை கடத்திச் சென்று மதுரையில் தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி பணத்தை கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. பத்து லட்ச ரூபாய் பணம் திருச்சி வங்கியில் உள்ள எனது லாக்கரில் இருப்பதாக பாலமுருகன் குறிப்பிட்டார்.
உடனடியாக கார் மூலம் திருச்சிக்கு பாலமுருகனை அழைத்து வந்து வங்கியில் பணத்தை எடுக்கும் போது அவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்து விட்டார். விரைந்து வந்த காவல்துறையினர் வந்து பாலமுருகனை மீட்டு அவரை கடத்தி வந்த வினோத் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். பணத்தை கொடுத்தவர்கள் சிறைக்கு செல்கிறார்கள். ஏமாற்றிய பாலமுருகன் வெளியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO