திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் குவாண்டம் கம்ப்யூட்டிங் குறித்த ஒருநாள் கருத்தரங்கு
திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் இயற்பியல் துறையில் குவாண்டம் கம்ப்யூட்டிங் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் இன்ஸ்ட்ருமெண்டேஷன் அண்ட் அப்பிளைட் இயற்பியல் துறையின் துணை ஆசிரியரான டாக்டர் டி எம் சந்திரசேகர் கலந்து கொண்டார்.
அவர் தனது உரையில் கிளாசிக்கல் கம்ப்யூட்டிங் குவாண்டம் கம்ப்யூட்டிங், க்யூபிட்கள் மற்றும் மல்டிபிள் க்யூபிட்கள்,சிக்கல் என்ற கருத்தாக்கத்தை விரிவாக பேசினார்.
அனைத்து பங்கேற்பாளர்களுக்கு நிறைவுறுதலின் போது பங்கேற்பதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
முன்னதாக தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் டி.வளவன் தலைமை உரையாற்றினார்.
ஆர்அண்ட் டி தலைவர் டாக்டர் நடராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO