சட்டமன்ற தேர்தலில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களும் தடுப்பூசி இலவசமாக போட்டு கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவுறுத்தல்

சட்டமன்ற தேர்தலில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களும் தடுப்பூசி இலவசமாக போட்டு கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவுறுத்தல்

கடந்த டிசம்பர் 2019 முதல் கொரோனா பெருந்தொற்று நோய் உலக அளவில் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி நிலையில், தற்போது தமிழகத்தில் கோவிட்-19 பெருந்தொற்று இரண்டாம் கட்டமாக வேகமாக பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் கோவிட்-19 
பெருந்தொற்றின் இரண்டாம் நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களும் கோவிட்-19 
பெருந்தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு மத்திய, மாநில அரசு மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியன தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

திருச்சி மாவட்டத்திலும் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மினி கிளினிக்குகளில் கோவிட்-19 தடுப்பூசியினை தேர்தல் பணியாளர்கள் இலவசமாக செலுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள பிரத்யேக மையங்கள் தொகுதி வாரியாக கீழ்காணும் இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


1. மணப்பாறை 
மணப்பாறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார 
நிலையம்


2. ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார 
நிலையம்

3. திருச்சி மேற்கு உறையூர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார 
நிலையம்

4. திருச்சி கிழக்கு பெரியமிளகுபாறை நகர்புற அரசு ஆரம்ப 
சுகாதார நிலையம்

5. துறையூர் துறையூர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார 
நிலையம்

6. திருவெறும்பூர் துவாக்குடி அரசு மருத்துவமனை 

7. இலால்குடி இலால்குடி அரசு மருத்துவமனை 

8. மண்ணச்சநல்லூர் சிறுகாம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

9. முசிறி தண்டலைப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார 
நிலையம்

இவ்விடங்களில் தேர்தல் பணியாளர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டையினை காண்பித்து கோவிட்-19 தடுப்பூசியினை இலவசமாக செலுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU