திருச்சி மலைக்கோட்டை புதிய தேர் வெள்ளோட்டம்- அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்சி மலைக்கோட்டை புதிய தேர் வெள்ளோட்டம்- அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்சயில் பிரசித்தி பெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில், மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட 8 லட்ச ரூபாய் மதிப்பிலான, தேக்கு மரத்திலான தேரினை

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மண்டலம் 3 தலைவர் மு‌.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு தேர் புறப்பாடினை உற்சவர் மண்டபத்தில் துவக்கி வைத்து, மாணிக்க விநாயகர் சன்னதியை சுற்றி வலம் வந்து மீண்டும் உற்சவர் மண்டபத்தில் நிலைநிறுத்தினர்.

முன்னதாக மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பங்கு கொண்டனர். அப்போது அமைச்சர்கள் முன்னிலையில் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலின் பெண் ஓதுவார் ரூபாவதி மாணிக்க விநாயகர் பாடலை பாடினார். உற்சவ காலங்களில் வேண்டும் பக்தர்கள் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி இத்தேரினை இழுக்கலாம் என கோயிலின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision