பொதுப்பணித்துறையின் பங்களிப்பால்   எல்காட் பூங்காவின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள்  முன்னேற்றம்

பொதுப்பணித்துறையின் பங்களிப்பால்   எல்காட் பூங்காவின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள்  முன்னேற்றம்

திருச்சி நவல்பட்டில் உள்ள எல்காட் ஐடி பூங்காவின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து உள்ளது.முக்கியமாக இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கட்டுமான தளத்திலேயே பொதுப்பணித்துறையினர் கவனித்துக்கொள்ளப்பட்டதால்
 பணிகள் துரிதமாக நடைபெற்று
 வருகிறது.

 திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள நான்கு மாடி அலுவலகத்தின் தரைதளத்தில் கூரை வேலைப்பாடுகள்   முடிக்கப்பட்டுள்ளது கட்டுமான பணிகளின் முன்னேற்றம் சற்று மந்தமான நிலையில் தற்போது  பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வேலை தொடரும் மூலப்பொருட்கள் முன்கூட்டியே இடத்திற்கு கொண்டு வரப்பட்டு சுமார் 40 தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றுகின்றனர்.

அடுத்த மூன்று மாதங்களில் மற்ற தளங்களுக்கான கூரை வேலைகள் நிறைவடையும் அதன்பின்னர் 1.13 லட்சம் சதுர அடி அலுவலக இடத்தை உருவாக்குவதற்கான கட்டமைப்பு பணிகள் தொடங்கப்படும்.
15 சதவீதத்திற்கும் மேற்பட்ட சிவில் பணிகள் நிறைவடைந்துள்ள.
 2022 ஜூன் மாதத்தில் இந்த திட்டம் அட்டவணைப்படி முடிக்கப்படும்.
 என்றும் தெரிவித்துள்ளனர்.
 48கோடி ரூபாய்  2020 டிசம்பரில்திட்டமானது தொடங்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH