வறண்டு கிடக்கும் புளியஞ்சோலை ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்

வறண்டு கிடக்கும் புளியஞ்சோலை ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்

புளியஞ்சோலை சுற்றுலா தளத்தில் நீர் வரத்து குறைந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் சுற்றுலாப் பயணிகள்சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால் வியாபாரிகள் கவலை!!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது புளியஞ்சோலை. இது கொல்லிமலை அடிவாரம் பகுதியாக அமைந்துள்ளது. இது திருச்சி மாவட்டத்தின் சுற்றுலா தளமாகவும் விளங்கி வருகிறது கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் நீர் மூலிகையில் பட்டு வருவதால் இங்கு நீராடினால் புத்துணர்ச்சி பெறுவதாகவும் மேலும் இது சித்தர்கள் வசிக்கும் பகுதியாகவும்ஏன் கொஞ்சும் சோலையாகவும் இருந்து வருகிறது.

  ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து நீராடி செல்வது வழக்கம், கரூர், நாமக்கல், தம்மம்பட்டி, ஆத்தூர், பெரம்பலூர் திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் 1000க் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர் சுற்றுலா பயணி நம்பி இங்கு சுற்றி உள்ள மக்கள் கடைகளை வைத்து வாழ்வாதாரம் நடத்தி வந்தனர் தற்போது கோடை காலம் என்பதால் நீர்வீழ்ச்சியில் நீர் வற்றியது நீர் வரத்து இல்லாததால் பாறைகள் மட்டுமே புளியஞ்சோலை பகுதியில் தென்படுகிறது இதனால் வெகு தொலைவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர் இதனால் இங்கு உள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி வருகின்றனர்

தற்போது புளியஞ்சோலை சுற்றுலா தளமானது ஆரவாரம் இன்றி அமைதி யானது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision