பாஜக பேரணிக்கு மறுப்பு - மாநகர காவல்துறை விளக்கம்

பாஜக பேரணிக்கு மறுப்பு - மாநகர காவல்துறை விளக்கம்

நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கூட்டணி மற்றும் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பாரதி ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா தலைமையில் திருச்சி காந்தி மார்க்கெட் வளைவு முதல் மலைக்கோட்டை வரை இன்று பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக பாஜகவினர் அனுமதி கோரி இருந்த நிலையில் இதுவரை மாநகர காவல் துறை சார்பில் அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து நேற்று இரவு ஜே.பி நட்டா திருச்சி வருகை தந்தார். தற்போது அரியலூர் செல்ல உள்ள நிலையில் இன்று மாலை பேரணி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

பேரணிக்கு அனுமதி மறுப்பு குறித்து திருச்சி மாநகர காவல் துறை விளக்கம் தெரிவித்துள்ளது இதில்திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலுக்கு திருச்சி மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பூச்செரித்தல் விழாவிற்காக பூக்களை கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று மாலை முதல் திருச்சி பெரிய கடை வீதியில் அதிகமான மக்கள் கூட்டம் மற்றும் பூச்செரித்தல் நடத்தும் விழா குழுவினர் சமயபுரம் செல்வார்கள் என்பதால் பாஜகவினர் அனுமதி கேட்டு இருக்கும் குறிப்பிட்ட சாலையில் அனுமதி வழங்கப்படாது என காவல்துறை திட்டவட்டம் தெரிவித்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision