திருச்சியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை!

திருச்சியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை!

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்.19 தேதி தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்துத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து தீவிரமடைந்துள்ளது.

இந்த தேர்தலையொட்டி அசம்பாவிதம் ஏற்படுத்த சமூக விரோதிகள் முயன்று வருவதாக தமிழக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு போலீசார் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ. வருண் குமார், தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, திருச்சி மாவட்ட காவல் துறையில் இயங்கிவரும் வெடிகுண்டு துப்பறியும் மற்றும் அகற்றும் படையினர் மோப்பநாய் உதவியுடன், திருச்சி மாவட்டத்தில் சமயபுரம், இலால்குடி, முசிறி, தொட்டியம், திருவெறும்பூர், மணப்பாறை உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும், வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision