வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குடிநீர் நீரேற்று நிலையம் - குடிநீர் தட்டுப்பாடு எழும் அபாயம்!
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா புள்ளம்பாடி ஒன்றியம் விரகாலூர் கிராமத்தில் சுமார் 800 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் குடிநீர் தேவைக்காக கொள்ளிடம் ஆற்றில் தலா 8 குதிரை திறன் கொண்ட மூன்று நீர்மூழ்கி மோட்டார் ஆழ் துளை கிணறுகள் போடப்பட்டுள்ளது. விரகாலூர் வாழ் பொதுமக்கள் தங்களின் குடிநீர் தேவைக்கு இந்த ஆழ் துணை கிணறுகளை நம்பியே உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கொள்ளிடம் ஆற்றில் நீர் திறப்பு படிப்படியாக அதிகரித்தது. ஒரு கட்டத்தில் 1.30 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டதால் கொள்ளிடம் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு நீர் பாய்ந்தோடியது. இதனால் விரகாலூரில் ஆற்றோரத்தில் இருந்த நீரேற்று நிலையம், மற்றும் மின் சாதனங்கள் அனைத்தும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனையடுத்து மாற்று ஏற்பாடாக மற்றொரு எட்டு குதிரை திறன் கொண்ட மின்மோட்டார் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. மூன்று மோட்டார்கள் செயல்பட்டு வந்த நிலையில் ஒரு மோட்டார் மட்டுமே இயக்கப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision