திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு - அதிர்ச்சி

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு - அதிர்ச்சி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் கீழ அம்பிகாபரத்தைச் சேர்ந்தவர் ஜான் ஜுடி மெயில் இவர் ரயில்வே ஊழியராக உள்ளார். இவரது மகள் ஜான் ஸ்டெபி ஜாக்லின் மெயில் (16). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில்ஜான் ஸ்டெபி ஜாக்குலின் மெயிலுக்கு நூடுல்ஸ் செய்து சாப்பிடுவது பிடிக்குமாம் இதனால் அடிக்கடி நூடுல்ஸ் உணவை விரும்பி சாப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜான் ஸ்டேபி ஜாக்லின் மெயில் வழக்கம்போல் நேற்று இரவு ஆன்லைனில் நூடுல்ஸை ஆடர் செய்து வாங்கி சாப்பிட்டு இரவு படுத்து தூங்கியுள்ளார். காலையில் அவர் பார்க்கும் பொழுது ஜான் ஸ்டெபி ஜாக்குலின் மெயில் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜான் ஜுடிமெயில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து இறுதி சடங்கு செய்வதற்குரிய பணியினை தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஜான் ஸ்டெபி ஜாக்குலின் மெயில் இறப்பில் சந்தேகம் உள்ளது என்றும் அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜான் ஸ்டெபி ஜாக்குலின் மெயிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்ற பொழுது ஜான் ஸ்டெபி ஜாக்குலின் மெயிலின் உறவினர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஏற்கனவே பெண் இறந்து போய் உள்ளார் என்று நாங்களே வருத்தத்தில் உள்ளோம் தற்பொழுது எதற்காக நீங்கள் அந்த பெண்ணை உடலை பிரேத பரிசோதனை செய்ய விரும்புகிறீர்கள் எங்களை நிம்மதியாக அடக்கம் செய்ய விடுங்கள் என அவரது உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் போலீசார் தங்களுக்கு புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் நாங்கள் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் கொடுக்க முடியும் இன்று மாலை 5 மணிக்குள் மருத்துவமனையில் கொண்டு சென்றால்தான் ஜான் ஸ்டேபி, ஜாக்குலின் மெயிலின் உடலை உங்களுக்கு பிரேத பரிசோதனை செய்து கொடுக்க முடியும் என கூறி அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision