மகனின் சின்னத்தை மாற்றி கூறிய வைகோ

மகனின் சின்னத்தை மாற்றி கூறிய வைகோ

துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்திற்கு பதிலாக உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்ட வைகோ.

தமிழக ஆளுநர் ஒரு உளறுவாயன் - தமிழ்நாட்டை தமிழகம் எனக் கூற ஆளுநர் யார்...?

பிரதமர் மோடி திராவிட கட்சியை அழித்துவிட்டு வருவேன் என கூறுகிறார் ஒரு பிரதமராக இருந்து கொண்டு திமுகவை அழித்துவிட்டு வருவேன் என யாராவது கூறியது உண்டா அவ்வளவு திமிர், அவ்வளவு அகம்பாவம் அவ்வளவு ஆணவம், இதனை ஒழிக்கத்தான் இந்த தேர்தல்

உதயசூரியன் சின்னத்தில் துரை வைக்கோ போட்டியிட்டால் பதவி இழந்து விடுவார் கட்சி நடுத்தெருவுக்கு வந்துவிடும் என்பதால் தனி சின்னத்தில் போட்டியிட நான்தான் கூறினேன்.

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஸ்ரீரங்கம் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி வரவேற்று தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் அதன் பின்னர் பேசிய வைகோ கூறுகையில் :

108 திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்தது குறித்து துரை வைகோவிடம் கேட்டபோது பெருமாளும் வேண்டும் பெரியாரும் வேண்டும் என கூறினார். 

துரை வைகோ மனிதாபிமானம் மிக்கவர் அரசியலுக்கு வருவார் என்று நினைக்கவில்லை எனக்கு மூன்று வருடம் உடல்நிலை சரியில்லாத போது அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அரசியலில் ஈடுபட்டார்.

மதிமுக தொண்டர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற அவர் அங்கு அவர் வீடு இருந்த நிலைமையை பார்த்து தொண்டர்களுக்காக பணியாற்ற வேண்டும் என தான் செல்லாத நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் துறை வைகோ சென்றார்.

துறை வைக்கோ அரசியலுக்கு வரலாமா என மறைமுக வாக்கெடுப்பு நடத்தினேன் -அப்போது 16 நபர்கள் வாக்களித்ததில் 102 பேர் விருப்பம் தெரிவித்தனர் - மற்றவர்கள் விருப்பம் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறார் அதில் காலை உணவு திட்டம் வெளிநாடுகள் வரை புகழ் பெற்று உள்ளது.

காவிரி கொள்ளிடம் ஆறுகள் வறண்டு கிடக்கும் சூழலில் கர்நாடகாவில் காவிரி இடையே அணை கட்டுவதற்கான 9500 கோடி தொகை ஒதுக்கப்பட்டு அதற்கான பொருட்கள் வந்து விட்டது அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கர்நாடகா அரசு செய்து வருகிறது - கடந்த காலத்தில் மூன்றாம் தோழர்கள் இங்கிருந்து படையை திரட்டி கொண்டு எப்போது எப்படி அணையை உடைத்தார்களோ வீரமங்கை ராணி மங்கம்மாள் எப்படி தமிழகத்தில் இருந்து ஒரு படையை கொண்டு சென்று அணையை உடைத்தாரோ அதேபோல் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவுடன் மிகப்பெரிய படையை திரட்டி கர்நாடகாவிற்கு செல்வோம்.

ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை கொண்டு வந்திருக்கிறார்.

எந்த மாநிலத்திலும் இல்லாத திராவிட மாடல் ஆட்சியை கொண்டு வந்து

இந்திய மாநிலங்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறார்..

 தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அடியொற்றி

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடியா அந்நாட்டு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அங்கு செயல்படுத்தியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஒரு உளறுவாயன், தமிழ் அறிஞர்கள் தமிழ்நாடு என்று வைத்த பெயரை தமிழகம் என்று மாற்றம் செய்ய நீங்கள் யார்?

தமிழக ஆளுநர் ரவி தனது உரையில் அண்ணா, பெரியார் பெயர்களை உச்சரிக்கவில்லை. இது ஆளுநரின் அதிகார எல்லையை கடந்த வேலை. தமிழ்நாடு என்பதனை கொண்டு வருவதற்கு அண்ணா இறுதி காலத்தில் முயற்சித்து கொண்டு வந்தார். 

பிரதமர் மோடி திராவிட கட்சியை அழித்துவிட்டு வருவேன் என கூறுகிறார் ஒரு பிரதமராக இருந்து கொண்டு திமுகவை அழித்துவிட்டு வருவேன் என யாராவது கூறியது உண்டா அவ்வளவு திமிர், அவ்வளவு அகம்பாவம் அவ்வளவு ஆணவம், இதனை ஒழிக்கத்தான் இந்த தேர்தல்.

ஸ்ரீரங்கம் பகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோவுக்கு உதயசூரியன் சின்னத்தில் ( தீப்பெட்டி என்பதற்கு பதிலாக உதயசூரியன் என்று மாற்றி கூறினார்) தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

தீப்பெட்டி வீட்டு பெண்கள் விளக்கு ஏற்றுவதற்கும், கோவில்களில் விளக்கேற்றுவதற்கும், புகை பிடிப்பவர்கள் தம் பத்த வைப்பதற்கும் கூட பயன்படுகிறது ''கூட்டத்தில் ஒருவர் நான் தம் அடிப்பதை விட்டு விட்டேன்" எனக் கூறுகிறார். என நகைச்சுவையாக கூறினார். 

உதயசூரியன் சின்னத்தில் துரை வைகோ போட்டியிட்டால் அவரது மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியை இழக்க நேரிடும் கட்சி நடு தெருவுக்கு வந்துவிடும் என்ற காரணத்தால் முன்பிருந்தே நான் மாற்று சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தினேன் என கூறினார்...

ஆகையால் தீப்பெட்டி சின்னத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வே ண்டும் என கேட்டுக்கொண்டு விடை பெற்றார்..#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision