பரந்தூரில் தான் விமான நிலையம் என்று மத்திய அமைச்சர் தான் கூறினார் - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குற்றச்சாட்டு

பரந்தூரில் தான் விமான நிலையம் என்று மத்திய அமைச்சர் தான் கூறினார் - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குற்றச்சாட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் காங்கிரஸ் கட்சி கிராம கமிட்டி மறுசீரமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் இப்ராஹிம் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் முதலில் டங்ஸ்டன் தேவை என்று சொன்ன அண்ணாமலை தான் இன்று தேவையில்லை என்று சொல்கிறார்.

மத்திய அரசும் சுரங்கம் வராது என்று தெரிவித்து உள்ளது. இதே போல் பரந்தூர் விமான நிலையம் அமைவது குறித்து தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு முதல்வரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் பரந்தூர் உள்ளிட்ட 4 இடங்கள் வழங்கப்பட்ட போது பரந்தூரில் தான் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா தான் கூறினார்.

இதில் தமிழக அரசு மேல் குறை கூற வேண்டிய அவசியம் என்ன இருக்கின்றது. மக்கள் மீது இடையூறு ஏற்படுத்தும் எந்த திட்டமாக இருந்தாலும், அதில் காங்கிரஸ் கட்சி மக்களுடன் நிற்கும். கூட்டணி என்பது வேறு - கொள்கை என்பது வேறு. பொங்கலுக்கு 1000 ரூபாய் கொடுக்காத போது கூட எங்கள் மாநிலத் தலைவர் அரசிடம் இதுகுறித்து கேட்டார்.

பாஜகவின் பி டீம் தான் நாம் தமிழர் கட்சி. பல்வேறு இடங்களில் பாஜகவின் சிந்தாங்களையும் நாம் தமிழர் கட்சியின் சீமான் எடுத்து வைக்கிறார். அவதூறுகளை வைத்து அரசியல் செய்வதே நாம் தமிழர் கட்சியின் வேலையாக உள்ளது என்று கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision