முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் பல்வேறு கல்விகளில் சேர்வதற்கான சார்ந்தோர் சான்று பெறுவதற்கான வழிமுறைகள்

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் பல்வேறு கல்விகளில் சேர்வதற்கான சார்ந்தோர் சான்று பெறுவதற்கான வழிமுறைகள்

திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் அறிவது, (2023-24)-ஆம் கல்வியாண்டிற்கு தங்களது சிறார்கள் பல்வேறு கல்விகளில் சேர்வதற்கு சார்ந்தோர் சான்று ஆன்லைன் (Online) http://exwel.tn.gov.in மூலம் விண்ணப்பித்து பெற்றிட வழிமுறைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி சார்ந்தோர் சான்று பெற்றிட அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அலுவலக வேலை நாட்களில் அலுவலகத்திற்கு வர இயலும் பட்சத்தில் கீழ்க்காணும் ஆவணங்களுடன் விண்ணப்பித்து சார்ந்தோர் சான்று பெற்றிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தின் எண், முன்னாள் படைவீரர் படைவிலகல் சான்று மற்றும் நகல், அடையாள அட்டை, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட 10-ம் வகுப்பு / +2 மதிப்பெண் பட்டியல், 10-ம் வகுப்பு பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், மகன் / மகள் பெயர் தனியே Part-Il order publication செய்யப்பட்டிருந்தால் அதன் நகல் இணைக்கப்பட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது (0431-2960579) என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision