பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி - பள்ளி மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு பேரணி
திருச்சிராப்பள்ளி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (Jamboree) மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருத்திரளணி விழா (28.01.2025) அன்று நடைபெறுவதை முன்னிட்டு பெருந்திரளணி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (23.01.2025) திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டு அரங்கில் சுமார் 2400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.
பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைர விழா மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா அகில இந்திய அளவிலான பெருந்திரளணி திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் 28-ஜனவரி-2025 முதல் 3-பிப்ரவரி-2025 முடிய நடைபெற உள்ளது. பெருந்திரளணியில் 20,000க்கும் மேற்பட்ட சாரண, சாரணியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் கலாச்சாரம், பண்பாடு குறித்த செயல்பாடுகளை நிகழ்த்திக் காட்ட உள்ளனர். வீர தீர செயல்பாடுகள், வேடிக்கை விளையாட்டுகள் ஆகியவற்றை செய்து காட்ட உள்ளனர். இப்பெருந்திரளணிக்காக மேடை, அரங்கம், கூடாரங்கள், சமையற் கூடங்கள், உணவு அருந்தும் அரங்கங்கள், குளியலறைகள், கழிப்பறைகள், மார்கெட் பகுதி மற்றும்
தமிழ்நாடு, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சாரண சாரணியாகள் அவர்களது கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான விழா மேடை அமைக்கும் பணி, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா அகில இந்திய அளவிலான பெருந்திரளணி நடைபெறவுள்ளதை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இந்த பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைர விழா மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா அகில இந்திய அளவிலான பெருந்திரளணி விழா சிறப்பாக நடைபெறவும், இப்பெருந்திரளணி நடை பெறுவதை பொதுமக்கள் அறியும் வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இலால்குடி கல்வி மாவட்டத்தில் 450 மாணவ, மாணவிகளும், முசிறி கல்வி மாவட்டத்தில் 500 மாணவ, மாணவிகளும்,
மணப்பாறை கல்வி மாவட்டத்தில் 850 மாணவ, மாணவிகளும் மற்றும் திருச்சிராப்பள்ளி கல்வி மாவட்டத்தில் 595 மாணவ, மாணவிகளும் 2395 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு இளைஞர்களின் எழுச்சி இந்தியாவின் வளர்ச்சி, தலைமைப்பண்பை வளர்ப்போம், நெகிழி தவிர்ப்போம், சுற்றுச்சூழல் காப்போம், ஒற்றுமை ஓங்குக. தேசம் காப்போம், சாரண சாரணியர்கள் சிக்கனமானவாகள், சகோதரத்துவத்தை வளர்ப்போம், தேசப்பற்றை வளர்ப்போம், சுற்றுச்சூழலை
பாதுகாப்போம், பிறருக்கு உதவி செய்வோம், பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், சாரணர் இயக்கம் விதியை பின்பற்றி நடப்போம், ஜாம்புரி சிறப்புற வாழ்த்துக்கள், சாரணன் தைரியமுடையவன் சாரணன் விலங்குகளிடம் நட்புடையவன் இயற்கையை நேசிப்பவன், சாரணன் மரியாதையுண யவன், சாரணன் எல்லோருக்கும் நண்பன் ஏனைய சாரணருக்குச் சகோதரன், சாரணன் மாறாப் பற்றுடையவன், பிளாஸ்டிக்கை ஒழிப்போம்! நிர்வளம் காப்போம்!! சாரண இயக்கம் 75 வது ஆண்டு வைர விழா கொண்டாடுவோம். இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் உள்ளிட்ட பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்பேரணியானது திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கிலிருந்து தொடங்கி ஜமால் முகமது கல்லூரி வழியாக டி.வி.எஸ் டோல்கேட் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் சென்று மீண்டும் டி.வி.எஸ் டோல்கேட், வழியாக அண்ணா விளையாட்டரங்கில் முடிவடைந்தது. இப்பேரணியில் மாணவ, மாணவிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர், மாநில முதன்மை பேராணையர் பாரத சாரண சாரணியர் இயக்கம் பெருந்திரளணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இப்பேரணியில் மாணவ, மாணவிகளுடன் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரெத்தினம், மாவட்ட வருவாய் அலுவலர் ரராஜலட்சுமி, மாநில முதன்மை பேராணையர் பாரத சாரண சாரணியர் இயக்கம் பெருந்திரளணி பொறுப்பாளர் அறிவொளி, மாநில கலவி இயக்குநர பழனிச்சாமி, மாவட்ட ஊாரசு வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர கங்காதாரிணி, சாரண சாரணியர் இயகக நிர்வாகிகள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரிய பெருமக்கள், அரசுத்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision