திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நியுமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி  ஆலோசனைக்கூட்டம் 

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நியுமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி  ஆலோசனைக்கூட்டம் 

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நியுமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி பி.சி.வி வழங்குவதுக் குறித்து ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு  தலைமையில் நேற்று (16.07.2021) நடைபெற்றது.

நியுமோகோக்கல் நிமோனியா என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒருவித தொற்று நோய் ஆகும். இது குழந்தைகளை பெரும்பாலும் பாதிக்கின்றன. இதனால் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிரமம், காய்ச்சல், இருமல், மற்றும் மூச்சுத்திணறல் ஆகிய குறைபாடுகள் ஏற்படுகின்றன. இது கடுமையாக இருந்தால், குழந்தைகளின் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். 
நியுமோகோக்கல் நோய் ஒருவருக்கு ஒருவர் இடையிலான சுவாசத் துளிகளால் பரவுகிறது. (எ.கா. இருமல் மற்றும் தும்மல்).

குழந்தைகளுக்கு இந்தவகை நியுமோனியா நோய்களுக்கு எதிராக நல்ல பாதுகாப்பை வழங்கும் புதிய நியுமோகோக்கல் காஞ்சுகட் தடுப்பூசி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இந்த தடுப்பூசி தற்போது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்பட உள்ளது.

பி.சி.வி 6 வாரங்கள்,14 வாரங்கள் மற்றும் மீண்டும் 9ஆம் மாதத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. நியுமோகோக்கல் நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க இந்தபி.சி.வி தடுப்பூசியின் மூன்று தவணைகளையும் அரசு இலவசமாக வழங்கி வரும் தடுப்பூசிபட்டியலில் சேரும்.

இந்த தடுப்பூசி குழந்தையின் வலது தொடையில் நடுப்பகுதியில் ஒரு உள் தசையில் ஊசி மூலம் தடுப்பூசி வழங்கப்படும்.இணை இயக்குநர் டாக்டர் லட்சுமி, துணை இயக்குநர் ராம்கணேஷ் (சுகாதாரப் பணிகள்) அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் வனிதா, நகர் நல அலுவலர் யாழினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH