காந்தி மார்க்கெட் பகுதியில் 3000 கிலோ இரசாயன மாம்பழங்கள் பறிமுதல்

காந்தி மார்க்கெட் பகுதியில் 3000 கிலோ இரசாயன மாம்பழங்கள் பறிமுதல்

நேற்று (29.06.2024) சனிக்கிழமை உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் காந்தி மார்க்கெட் பகுதியில் மொத்த விற்பனை செய்யும் பழ மண்டிகளில் உணவு பாதுகாப்பு துறையின் குழுவால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு செய்ததில் மொத்த வியாபாரிகள் MMY பழமண்டி, RAN பழ மண்டி மற்றும் செல்வி பழமண்டி ஆகிய 3 பழ மண்டிகளில் சுமார் 3000 கிலோ கிராம் எத்திலீன் ஸ்பிரே மூலமாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மூன்று சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்விற்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட நியமன அலுவலர் அவர்கள் கூறுகையில்.... இக்கோடை காலத்தில் மாம்பழங்கள், தர்பூசணிகள் மற்றும் வாழைப்பழங்கள் கெமிக்கல் மூலமாக பழுக்க வைப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் இதுபோன்ற பழங்களை இரசாயன முறையில் பழுக்க வைப்பது தெரிந்தால் உடனே உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகவல் அளிப்பவரின் விபரங்கள் இரகசியம் காக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கீழே கொடுக்கப்பட்டுள்ள புகார் எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

மாவட்ட புகார் எண் : 96 26 83 95 95

மாநிலபுகார் எண் : 9444042322

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision