கோயில் வாசலில் தூங்குவதில் பிரச்சனை - கல்லை தலையில் போட்டு கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

கோயில் வாசலில் தூங்குவதில் பிரச்சனை -  கல்லை தலையில் போட்டு கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

கடந்த 17.01.23-ந் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லையில் கீழ உத்திரவீதி ஆஞ்சநேயர் கோயில் வாசலில் தூங்குவது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு ஆல் இந்தியா ரேடியோவில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஒய்வு பெற்ற ஊழியரின் தலையில் சிமெண்ட் கல்லால் தாக்கி கொலை செய்ததாக ஈரோடு காசிபாளையத்தை சேர்ந்த முருகேசன் (40), த.பெ.சோலையப்பன் என்பவரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வழக்கின் எதிரி முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, மேற்படி எதிரி முருகேசன் மீது (16.03.2023)-ந் தேதி குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரியான ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் நிவேதாலட்சுமி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். மேற்படி வழக்கில் திருச்சி மாவட்ட 1-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி P.செல்வ முத்துகுமாரி நீதிமன்ற விசாரணையை முடித்து, இன்று (07.08.2023)-ம் தேதி,

மேற்படி எதிரி முருகேசனுக்கு ச/பி 302 IPC ன்படி ஆயுள் தண்டனையும், அபராதம் ரூ.500/-ம், அபராதம் கட்ட தவறினால் ஒரு மாத சிறை தண்டனையும், ச/பி 294(b) IPC ன்படி 3 மாத சிறை தண்டனையும் விதித்து, சிறை தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் சக்திவேல் ஆஜராகி அரசு சார்பாக வாதாடினார்.

இவ்வழக்கில் மிக குறுகிய காலத்தில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் நிவேதாலட்சுமி, புலன்விசாரணையில் உறுதுணையாக இருந்த ஸ்ரீரங்கம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அரங்கநாதன் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் N.காமினி, வெகுவாக பாரட்டினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision