ஸ்ரீரங்கம் கோவிலில் சக்கரத்தாழ்வார்,காட்டழகிய சிங்கப்பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்

ஸ்ரீரங்கம் கோவிலில் சக்கரத்தாழ்வார்,காட்டழகிய சிங்கப்பெருமாளுக்கு  ஜேஷ்டாபிஷேகம்

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் நம்பெருமாள், தாயார் ஜேஷ்டாபிஷேகம் முடிந்தது. இன்று(29.07.2022 வெள்ளிக்கிழமை) சக்ககரத்தாழ்வார் சன்னதிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

காலை வடதிருக்காவேரி எனும் கொள்ளிடத்திலிருந்து வெள்ளிக்குடங்களில் கோயில் யானை ஆண்டாள் மற்றும் கைங்கர்யபரர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். சக்கரத்தாழ்வார் சன்னதியில் தீர்த்த குடங்களை சேர்த்து விட்டு பின்னர் மறுபடியும் வடதிருக்காவிரி சென்று வெள்ளிக்குடங்களில் தீர்த்தம் எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலின் கிழக்கே அமைந்துள்ள

காட்டழகிய சிங்கபெருமாள் கோயிலுக்கு வெள்ளிக்குடங்களில் வெள்ளி தீர்த்தகுடங்களை எடுத்துக் கொண்டு வடக்கு சித்திரை வீதி வழியாக ஸ்ரீகாட்டழகிய சிங்கர் கோயிலுக்கு சென்றனர்.

சக்கரத்தாழ்வார் சன்னதி மற்றும் காட்டழகிய சிங்கபெருமாள் கோவிலில் ஜேஸ்டாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO