திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

திருச்சி மாநகரம் கே.கே.நகர், மாநகர ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள திருச்சி ரைபிள் கிளப் கடந்த 31.12.2021 முதல் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபின் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவுகளில் 24.07.2022-ந்தேதி முதல் நடைபெற்றுவருகிறது.

தமிழகம் முழுவதும் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1300 போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் இப்போட்டியானது திருச்சி ரைபிள் கிளப்பில் முதல் முறையாக நடத்தப்பட்டுவருகிறது. இப்போட்டியில் 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறியவர்கள் இளைஞர்கள், முதியவர்கள், என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத் (16 வயது வரை), யூத் (19 வயது வளர) ஜீனியர் (21 வயது வரை) சீனியர் (21முதல் 45 வரை), மாஸ்டர் (45 வயது முதல் 60 வயது வரை) மற்றும் சீனியர் மாஸ்டர் ( 60 வயதுக்கு மேல்) தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர்.

24.07.2022-ந்தேதி முதல் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்குபெற்றவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று 28.07.2022-ந்தேதி பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குனர் W.I.தேவாரம்,திருச்சி மாநகர காவல் ஆணையர்  G.கார்த்திகேயன், ,மத்திய மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ்குமார் , திருச்சி ரைபிள் கிளப் ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தூர்செல்வன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் இனமுருகன் மற்றும் கிளப்பின் தலைமை அதிகாரி சந்திரமோகன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில், வெற்றிபெற்ற 56 நபர்களுக்கு தங்கம் பதக்கமும், 55 நபர்களுக்கு வெள்ளி பதக்கமும், 51 நபர்களுக்கு வெண்கலம் பதக்கமும், ஆகமொத்தம் 162 வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

மேலும் 29.07.2022-ந்தேதி முதல் 31.07.2022-வரையில் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று இறுதி நாளில் வெற்றி பெறுவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY


#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO