ஓதுவார் பயிற்சி சான்றிதழ் படிப்பு - மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு

ஓதுவார் பயிற்சி சான்றிதழ் படிப்பு - மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் சமயபுரம், ஓதுவார் பயிற்சிக்கான மூன்றாண்டு சான்றிதழ் படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 13 வயது முதல் 20-க்குள் இருக்க வேண்டும்.

உணவு, தங்குமிடத்துடன் மாதம் ரூ. 4000/ உதவித்தொகை வழங்கப்படும். மூன்றாண்டு இலவச பயிற்சி உடனே விண்ணப்பியுங்கள். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : (19.07.2024)

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள முதுநிலைத் திருக்கோயில்களில் உள்ள ஓதுவார் பணியிடங்களுக்கு ரூ.15,900/- 50,400/- என்ற ஊதிய விகிதத்திலும் முதுநிலை அல்லாத திருக்கோயில்களில் உள்ள ஓதுவார் பணியிடங்களுக்கு ரூ.11,600/- 36,800/- என்ற ஊதிய விகித சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் பெற அணுக வேண்டிய முகவரி : இணை ஆணையர் / செயல் அலுவலர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் 621112. Website : www.samayapurammariammantemple.in E-mail : symmariamman@gmail.com / samayapurammariamman@gmail.com

Phone: 0431-2670460, Cell: 94431 07771

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision