பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு எட்டப்படும் - இலங்கை பாராளுமன்ற கண்டி மாவட்ட உறுப்பினர் திருச்சியில் பேட்டி.

பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு எட்டப்படும் - இலங்கை பாராளுமன்ற கண்டி மாவட்ட  உறுப்பினர் திருச்சியில் பேட்டி.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், இலங்கை பாராளுமன்ற கண்டி மாவட்ட உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரி ஆர். டி. பி. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவதற்காக, கொழும்பில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு வந்திருந்தார். 

அவர் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்... இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கு நடந்த முடிந்த நாடாளுமன்ற பொது தேர்தலில், மூன்றாவது முறையாக வெற்றிபெற்று நரேந்திர மோடி பிரதமாராக பொறுப்பேற்றுள்ளார்.

அதுபோல, தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்று, நாட்டின் பலமான எதிர்கட்சி என்ற நிலையை எட்டிப்பிடித்துள்ளது. மொத்தத்தில் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆளும் கட்சியினருக்கும், எதிர் கட்சியினருக்கும் எனது வாழ்த்துக்கள். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.

இந்தியா - இலங்கை இடையிலான, இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதில், இருதரப்பு மீனவர்களும், தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தாமல் இருப்பது, நாடுகளுக்கு இடையே வரையறுக்கப்பட்ட அரசியல் எல்லைக்குள் மீன்பிடித் தொழிலை செய்வது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இப்பிரச்சனைக்கு ஒரு சுமூகமான முடிவு எட்டப்படும்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல், பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவித்தது. அத்தகைய நெருக்கடியில் இருந்து தற்போது இலங்கை அரசு மீண்டுவருகிறது. அதற்கு தேவையான பொருளாதார உதவிகளை இலங்கைக்கு, இந்திய அரசு செய்துள்ளது.

மேலும்,இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஒரு லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தையும் இந்திய அரசு இலங்கையில் செயல்படுத்தி வருகிறது. இலங்கையில் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் எங்களது அணி வெற்றி பெற்றவுடன், இலங்கை வாழ் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்களை செயல்படுத்துவோம் என கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision