மத்திய மண்டல காவல்துறை தலைவரின் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
வருகிற நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் நவம்பர் 1 முதல் நவம்பர் 14 வரை குழந்தைகள் பாதுகாப்பு வாரமாக கடைபிடிக்கப்படும் என மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
குழந்தைகள் பாதுகாப்பு வாரம் கடைபிடிப்பதன் முக்கிய நோக்கம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் இதர குற்றங்களை முற்றிலும் தடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி ஒவ்வொரு கிராம பகுதிகளும் வீடுவீடாக சென்று பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்க வேண்டும்.
ஆபத்து காலத்தில் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய அவசர எண்கள் 100, 181,1091, 1098 ஆகிய எண்களின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்க கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் காவல் அதிகாரிகள் காவலர்கள் மூலம் அந்தந்த காவல் உட்பட்ட கிராமப் பகுதிகளில் நவம்பர் 1 முதல் 14ஆம் தேதி வரை விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளபப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் திருச்சியிலிருந்து தஞ்சாவூருக்கு மிதிவண்டி மூலம் சென்று விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார். வல்லம்,செங்கிப்பட்டி பகுதிகளில் பொதுமக்களிடம் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
அவர்களிடம் சிறிது நேரம் பேசி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து கூறி சென்றார். அவர் ஐம்பது கிலோமீட்டர் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
கடந்த 1ஆம் தேதியிலிருந்து 5ம் தேதி வரை 1607 கிராமங்களில் 64 ஆயிரத்து 539 வீடுகளில் பொதுமக்களை சந்தித்து 1853 தன்னார்வலர்களின் உதவியுடன் காவல் துறையினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
1465 விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு அதில் கலந்துகொண்ட 64565 பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய...