திருச்சி தங்கையா நகர் நுண்உரம் செயலாக்க மையத்தின் வாசலில் வழிந்து ஓடும் கழிவுநீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்:
திருச்சி மாவட்டத்தின் நிர்வாகத்
தூய்மைத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் ஒரு பகுதியாக குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர் மக்கும் குப்பைகள் நுண்உரம் செயலாக்கம் மையம் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு தயாரிக்கப்படும் உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.இந்த மையத்தின் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு நன்மை கிடைத்தாலும் செயலாக்க மையம் செயல்படும் அப்பகுதிவாசிகளுக்கு செயலாக்க மையத்திலிருத்திலிருந்து வெளிவரும் துர்நாற்றம் நோய்த்தொற்று கொண்டாடுவதற்கான அபாயத்தை ஏற்படுத்துகின்றது.
திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் தங்கையா நகரில் செயல்பட்டு வரும் நுண்உரம் செயலாக்க மையத்தின் வாசலில் முன்னே சாக்கடைக்கு தொட்டியில் சாக்கடை நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.நுண் உரம் தயாரிப்பதற்காக கொட்டப்படும் குப்பைகளால் வெளியேறும் துர்நாற்றம் ஏற்கனவே பகுதி மக்கள் பல நோய்த்தொற்று அபாயத்தில் உள்ள நிலையில் சாக்கடை தொட்டியில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் பல்வேறு நோய்கள் ஏற்படும் சூழல் நிலவுவதால் உடனடியாக மாநகராட்சி அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision