பொதுமக்களுக்காக களத்தில் இறங்கிய பழூர் ஊராட்சி தலைவர் ஜீவா  பெரியசாமி

பொதுமக்களுக்காக களத்தில் இறங்கிய பழூர் ஊராட்சி தலைவர் ஜீவா  பெரியசாமி

ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயலால் பாதிக்கபட்ட பழூர் கிராமம் மற்றும்  சுற்று வட்டார  பொதுமக்கள்.

திருச்சி மாவட்டம் சீரங்கம் வட்டத்துக்குட்பட்ட பழுர் கிராம ஊராட்சியில்  ரயில்வே சுரங்கபாலம் கட்டி பணிகள் முடிக்க படாமலே ரயில்வே கேட்டை நிர்வாகம் மூடியதால் பொதுமக்கள் பலரும் பல விதங்களில் பாதிக்க பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக ரயில்வே நிர்வாக கவனத்திற்க்கு கொண்டு சென்றும் இப் பிரச்சனைக்கு தீர்வு எட்டபடாததால் பழூர் ஊராட்சி தலைவி ஜீவா பெரியசாமி ,கிராம ஊராட்சி மக்கள்  மற்றும் பிரதிநிதிகள்,சுற்று வட்டார பொதுமக்களுடன் இணைந்து அமைதி வழியில் நோய்தொற்று பாதுகாப்பு அம்சங்களுடன் இன்று  ரயில்வே கேட் அருகே காத்திருப்பு போராட்டம் நடைபெறும் அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே துணை கண்காணிப்பாளர் மற்றம் ஜீயபுரம் சார்பு ஆய்வாளர் ஆகியோர் பழூர் மக்கள் பிரதிநிதிகளிடம் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்க்கு நிரந்தரதீர்வு செய்து தருவதாகவும், குறைபாடுகள் சம்பந்தமாக அமைதி பேச்சு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக கூறியதையடுத்து மக்கள் பிரதிநிதிகள் கலைந்து சென்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழியாக அறிந்து கொள்ள

https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx