கல்குவாரியால் கதறும் பொதுமக்கள் - எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சொரத்தூர் கிராமம் இங்கு சுமார் 5000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊருக்கு 500 மீட்டர் தொலைவில் கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த கல்குவாரியில் கற்களை வெட்டி எடுப்பதற்காக வைக்கும் வெடி சத்தமானது இப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்களை பாதிப்பதாகவும், விவசாய நிலங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
இரவு நேரங்களில் மக்கள் மற்றும் நோயாளிகள் தூங்க முடியாத அளவிற்கு அளவுக்கு அதிகமான வெடிசத்தம் இருப்பதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு காலையில் தங்கள் பணிகளை முழுமையாக செய்ய முடியவில்லை என கூறி வருகின்றனர். இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தற்போது ஊர் அருகிலேயே செயல்படு வரும் கல்குவாரியின் உரிமையை ரத்து செய்யுமாறு தீர்மானம் இயற்றப்பட்டு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision