எம்.பி பிறந்தநாளுக்கு வைக்க வேண்டிய பேனரை துணை முதல்வரை வரவேற்க வைத்து டபுல் பர்பஸ் வேலை பார்த்த திமுகவினர்.

எம்.பி பிறந்தநாளுக்கு வைக்க வேண்டிய பேனரை துணை முதல்வரை வரவேற்க வைத்து டபுல் பர்பஸ் வேலை பார்த்த திமுகவினர்.

திருச்சியில் துணை முதல்வர் உதயநிதியை வரவேற்க பேனர்கள் வைத்த திருச்சி திமுகவினர் ஆர்வம் மிகுதியால் எம்பி அருண் நேருவுக்கு வைத்த பேனரையே வைத்துவிட்டனர். திருச்சி மாவட்டம் துறையூர் பஸ் ஸ்டாண்டில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை தற்போதைய துணை முதல்வர் உதயநிதி திறந்து வைக்க உள்ளார்.

சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் துணை முதல்வர் உதயநிதியை வரவேற்று திருச்சி மாநகரப் பகுதிகளில் பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. துறையூருக்கு வரும் உதயநிதியை வரவேற்று பேனர்கள் வைத்த திமுகவினர் ஆர்வம் மிகுதியால் பெரம்பலூர் எம்பி அருண் நேரு பிறந்தநாளுக்குரிய பேனரையே வைத்து விட்டனர்.

பிறந்தநாள் பேனரை வைத்த திமுகவினர் சுதாரித்துக் கொண்டு அந்த பேனரை திருப்பி வைத்து, அதில் திருச்சி திமுக வடக்கு மற்றும் மத்திய மாவட்டம் சார்பில் உதயநிதியை வரவேற்கும் வகையிலான போஸ்டர்களை ஒட்டி சமாளித்துள்ளனர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல் டபுள் பர்பஸ் வேலையை திமுகவினர் பார்த்து விட்டனர்.

பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேருவுக்கு வருகிற டிசம்பர் 12ஆம் தேதி பிறந்தநாள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision