மின்சாரம் தாக்கி பசு உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஸ்ரீதேவிமங்கலம் மாரியம்மன் கோவில் நடுத்தெருவை சேர்ந்த சேகர், கால்நடைகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை விவசாய நிலப் பகுதியில் மேச்சலுக்கு கால்நடை அவிழ்த்து விடப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கால்நடை சாலையோரம் மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள ஈபி அலுவலகம் எதிரே மின் கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது மின் கம்பம் பகுதியில் உள்ள புல்களை மேய்ந்து கொண்டிருந்த பசு மீது மின்சாரம் பாய்ந்து சேகரின் 50,000 மதிப்புள்ள பசு மாடு மின் கம்பத்திற்கு அடியில் கீழே விழுந்து கடந்தது. இதனை கண்ட அப்பகுதி வாசிகள் மாட்டின் உரிமையாளர் சேகருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சேகர் பசு மாட்டை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அங்கு மாட்டை பரிசோதனை செய்த மருத்துவர் மாடு உயிரிழந்ததாக தெரிவித்தார்.
இதுக்குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர். குடியிருப்பு பகுதியில் மின் கம்பம் இருந்து வரும் நிலையில், பருவமழை பெய்து வருகிறது. மாட்டிற்கு பதிலாக மனிதர்கள் அந்த மின் கம்பம் பகுதிக்கு சென்று இருந்தால் விபரீதமாக ஏற்பட்டிருக்கும். உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் மாதாந்திர பராமரிப்பு பணியில் அலட்சியத்தோடு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதிவாசிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision