திருச்சி பிரதான சாலையில் துர்நாற்றத்துடன் கழிவுநீர் வெளியேற்றம் - மூக்கை பிடித்து செல்லும் வாகன ஓட்டிகள்.

திருச்சி பிரதான சாலையில் துர்நாற்றத்துடன் கழிவுநீர் வெளியேற்றம் -  மூக்கை பிடித்து செல்லும் வாகன ஓட்டிகள்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் ரெனால்ட்ஸ் ரோடு பகுதியில் இருந்து வெஸ்ட்டி பள்ளி நோக்கி வரும் சாலையில் மூன்று சாலை சந்திப்பு அருகே கடந்த ஒரு வார காலமாக சாக்கடை கழிவு நீர் ரோட்டில் ஓடுகிறது.

மாலை நேரத்தில் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை அவ்வளவு துர்நாற்றத்துடன் அந்த கழிவு நீர் சாலையில் ஓடி தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த துர்நாற்றம் வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா சிக்னல் வரை வீசுகிறது.

மாநகராட்சி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தான் இப்பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை மேற்கொண்டு சாலைகளை செப்பன்னிட்டது. இந்நிலையில் மிகுந்த துர்நாற்றத்துடன் கழிவு நீர் மாலை 6 மணியில் இருந்து இரவு முழுவதும் வெளியாகி வழிந்து வருகிறது. அந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் அதில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக இதனை மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்து வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கழிவுநீர் சாலையில் தேங்கி நின்று தூர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில் கொண்டு விரைவாக கழிவுநீர் வெளியேறுவதை தடுத்து சரி செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். சமீபத்தில் தூய்மை நகர பட்டியலில் திருச்சி மாநகராட்சி முதலிடம் பெற்று மத்திய அரசிடம் சான்றிதழ் பெற்றது இந்த நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலையில் இப்படி ஒரு நிலைமை இருப்பது மாநகர மக்களிடம் விவாதத்துக்கு உள்ளாக்கி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision