உணவக கடை பொருட்களை எடுத்து சென்ற மாநகராட்சி - உரிமையாளர்கள் வாக்குவாதம்

உணவக கடை பொருட்களை எடுத்து சென்ற மாநகராட்சி -  உரிமையாளர்கள் வாக்குவாதம்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம், ராகின்ஸ் ரோடு, வில்லியம்ஸ் ரோடு, பாரதிதாசன் சாலை ஆகிய பகுதிகளில் ஏராளமான இரவு நேர சாலையோர உணவகங்கள் இயங்கி வருகின்றன. ஒருசில கடைகள் மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டிருக்கும் பெட்டிகளை அமைத்து அவற்றில் கடைகளை நடத்தி வருகின்றனர்.

இதற்காக அவர்கள் மாநகராட்சிக்குரிய வாடகை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த இரவு நேர சாலையோர உணவக கடைகள் சாலை ஆக்கிரமித்து டேபிள் சேர் போன்றவற்றை வைத்து வியாபாரம் செய்து வருவதாக மாநகராட்சிக்கு புகார் வந்துள்ளதாக கூறி மாநகராட்சி உதவியாளர் சண்முகம் தலைமையில், இளநிலை பொறியாளர் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள், சாலையோர இரவு நேர உணவு கடைகள் மற்றும் பிரியாணி கடைகள் உட்பட 50-க்கும் மேற்பட்ட கடைகளில் வைக்கப்பட்டிருந்த

எரிவாயு உருளை, தட்டு, வாலி, போன்ற அனைத்தையும் வலுக்கட்டாயமாக பிடுங்கி மாநகராட்சி குப்பை அள்ளும் வாகனத்தில் ஏற்றினர். மேலும் உணவகங்களில் நின்று சாப்பிட்டு கொண்டிருந்தவர்களின் உணவோடு சேர்த்து தட்டையும் பிடுங்கிக் கொண்டது அவலத்தின் உச்சம். அப்போது இரவு நேர கடை உரிமையாளர்கள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கண்டோன்மெண்ட் பகுதி பரபரப்பு ஏற்பட்டது தகவல் இருந்து வந்த போலீசார் கடை உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாநகராட்சி லாரியில் ஏற்பட்ட பொருட்களை இறக்கி மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision