தளர்வுகளற்ற முழு ஊரடங்கில் 350 வாகனங்கள் பறிமுதல் - ட்ரோன் கேமிரா மூலம் போலீசார் கண்காணிப்பு.

தளர்வுகளற்ற முழு ஊரடங்கில் 350 வாகனங்கள் பறிமுதல் - ட்ரோன் கேமிரா மூலம் போலீசார் கண்காணிப்பு.

கொரோனா தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் ஒருபகுதியாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இம்மாதம் 30ம் தேதி அமல்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையிலும், ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

திருச்சி மாநகரில் இன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தகுந்த ஆவணங்கள் இன்றி வெளிவரும் வாகனங்கள் மற்றும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று ஊரடங்கின் போது 350க்கும் மேற்பட்ட வாகனங்கள் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டு திருச்சி கே.கே
நகர் ஆயுதப்படை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகன போக்குவரத்து எந்த பகுதியில் அதிகம் காணப்படுகிறது என்பதை கண்டறிய ட்ரோன் கேமிரா மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx