மணப்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

மணப்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

மணப்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் மாணவ மாணவிகள் தப்பாட்டம் அடித்து கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பன்னாங்கொம்பு  அரசு கலை அறிவியல் கலை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.கல்லூரி முதல்வர் அங்கம்மாள்  தலைமை வகித்தார்.

சமத்து பொங்கல் விழாவில்சர்க்கரைபொங்கல், கரும்புடன் வாழைப்பழம் வைத்து பானையை  சுற்றி மாணவ, மாணவிகளின் தப்பாட்டம் , கும்மியாட்டமிட்டு, குழவையிட்டு பொங்கல் வைத்தனர்.

 கலைநிகழ்ச்சியில்  மாணவ மாணவிகள் புத்தாடை சேலை கட்டியும் மாணவர்கள் வேஷ்டி சட்டை அணிந்தும் கும்மியடித்து சுற்றி வந்தார்கள் பின்பு , கோலப்போட்டி, பாட்டு போட்டி, நடனப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் பேராசிரியர்கள் முனைவர்கள் நோபல் ஜெயக்குமார், நூர்ஜகான் , சக்திவே ல், அலுவலர்கள், மாணவ, மாணவிகள், கல்லூரி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

   

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn