திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் HIMCON- 21 இரண்டு நாள் கருத்தரங்கு
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் கடந்த இரண்டு நாட்களாக மேலாண்மையியல் துறையின் சார்பாக HIMCON-2021 என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் பால் தயாபரன் அவர்கள் தலைமை தாங்க சதீஷ் ராஜகோபால் சீனியர் கஸ்டமர் எங்கேஜிமெண்ட் எக்சீகுடீவ்,SAP USA துவக்க உரையாற்றி விழாவை தொடங்கிவைத்தார்.துறைத் தலைவர் மைக்கேல் டேவிட் பிரேம்குமார் வாழ்த்துரை வழங்கினார். விழாவிற்கு வந்திருந்தவர்களை ஒருங்கிணைப்பாளர் பெட்ரிஷியா வரவேற்றார் .
முதல்நாள் நிகழ்வாக சோபன் ஜெகதீசன் டெக்னிக்கல் மேனேஜர் TSMC கலிபோர்னியா அமெரிக்காவில் இருந்து பேரிடர் காலத்தில் அமெரிக்க வியாபார நிறுவனங்களின் நிலைப்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இரண்டாம் நாளான இன்று பேராசிரியர் சிவாஜி பானர்ஜி சேவியாஸ் காலேஜ் கல்கத்தாவிலிருந்து பேரிடர் சமயத்தில் இந்திய நுகர்வோரின் நடவடிக்கைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
முனைவர் பழனிவேல் அவர்களின் அண்மைக் காலங்களில் நிதி சேவைகளின் மாற்றங்கள் என்ற தலைப்பில் கிழக்கு ஆப்பிரிக்க பல்கலை கழகமான st.John Baptist DMI கல்லூரியிலிருந்து உரையாற்றினார். இரண்டு நாட்களாக பல கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்களும் ஆய்வு மாணவர்களும் நூற்றுக்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மேலும் வியாபாரத் திட்டங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டியில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் முனைவர் ஆனந்து கிடியன் பிஷப் ஹீபர் கல்லூரி எக்ஸ்டென்ஷன் ஆக்டிவிட்டீஸ் டீன் தலைமையேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இறுதியாக பேராசிரியை க்லனி ஜோஸ்லின் நன்றி கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU