பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லை - கவுன்சிலர் புகார்

பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லை - கவுன்சிலர் புகார்

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் லால்குடி பேருந்து நிலையத்தில் முன்பு அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயங்காததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உடனடியாக வழங்க வேண்டும் 

இந்த நகராட்சி அலுவலகம் செயல்படும் முன்பு பேரூராட்சி அலுவலகம் ஆக இருந்தது அந்த பேரூராட்சி அலுவலகமாக இருந்த காலகட்டங்களில் அப்போதைய பணியாளர்கள் கவுன்சிலர்களுக்கும் பொதுமக்களுக்கும் உரிய மரியாதை வழங்கி வந்தனர். ஆனால் தற்போது நகராட்சி அலுவலகமாக தரம் உயர்ந்த பிறகு நகராட்சி கவுன்சிலர்களுக்கும், பொது மக்களுக்கும் இங்கு பணியாற்றும் பணியாளர்கள் உரிய மரியாதையும் உரிய பதிலையும் கொடுக்க மறுப்பதாக அதிமுக கவுன்சிலர் மருதமுத்து கூட்டத்தில் வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த நகராட்சி ஆணையர் குமார்...... இது பற்றிய எந்த ஒரு புகார் எனது கவனத்திற்கு வரவில்லை எனவும், முதல் முறையாக கூட்ட மன்றத்திலே ஒரு கவுன்சிலர் குறிப்பிட்டிருந்ததால் இதனை தனி கவனம் செலுத்தி இந்த குறைகள் களையப்படும் என ஆணையர் உறுதியளித்தார். மேலும் நகர மன்ற கூட்டம் முடிந்த பிறகு கவுன்சிலர் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு அறுசுவை உணவு அல்லது அசைவ உணவு வழங்க வேண்டும் என அனைத்து கவுன்சிலர்கள் சார்பில் அதிமுக கவுன்சிலர் மருதமுத்து கூட்டத்தில் வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து கூட்டத்தில் தெருவிளக்கு, பாலம் அமைத்தல், கலைஞர் நகர் புறம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வார சந்தை மேம்பாடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துரை மாணிக்கம் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் குமார் நகராட்சி துணைத் தலைவர் சுகுணா ராஜமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் , அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் நடந்த பொழுது பெண் கவுன்சிலர் அனைத்தையும் மறந்து நிம்மதியாக தூங்கி வழிந்தது கூட்டத்தில் இருப்பவரை முகம் சுளிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision